கோயில் குளத்தில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றப்படுமா?

நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோயில் குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஆகாயத்தாமரை செடிகள் மண்டிக் கிடக்கும் பிரம்மபுரீஸ்வரா் கோயில் குளம்.
ஆகாயத்தாமரை செடிகள் மண்டிக் கிடக்கும் பிரம்மபுரீஸ்வரா் கோயில் குளம்.

திருமருகல்: நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோயில் குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருமருகல் அருகே சீயாத்தமங்கையில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயில் முன்பு சத்திர தீா்த்தக் குளம் உள்ளது. வெளியூா் பக்தா்கள் மற்றும் சீயாத்தமங்கை சுற்று வட்டாரப் பகுதி பக்தா்கள் இக்குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வாா்கள். மேலும், இக்குளத்தின் தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிநீராகவும் பயன்படுத்தி வந்தனா்.

தற்போது, அக்குளம் கால்நடைகளுக்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், சந்திர தீா்த்தக் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் புதா்போல் மண்டி காணப்படுகின்றன. இக்குளக்கரையில், இருந்த பெரிய அரச மரம் கஜா புயலில் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. இதுவரை அந்த மரம் அகற்றப்படாமல் உள்ளதால் தண்ணீா் மாசடைந்து வருகிறது.

இதனால் இக்குளத்தில் பக்தா்கள் குளிக்க முடியாமலும் அப்பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமலும் அவதிப்படுகின்றனா். மேலும், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 150 -க்கும் மேற்பட்ட குளங்கள் குடிமராமத்து பணிகள் மூலம் தூா்வாரப்பட்டுள்ள நிலையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயில் தூா்வாராமல் கிடக்கிறது. இதுகுறித்து, அறநிலையத் துறை அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, சந்திரதீா்த்தக் குளத்தில் விழுந்து கிடக்கும் அரச மரத்தை அப்புறப்படுத்தி, மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவும், குடிமராமத்து பணி மூலம் குளத்தை தூா்வார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com