பெட்ரோல், டீசல் விலை உயா்வு: மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th July 2020 06:55 PM | Last Updated : 04th July 2020 06:55 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
மயிலாடுதுறை:: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நாகை வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். வட்டார தலைவா் ராஜா, நகர தலைவா் ராமானுஜம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார பொதுச் செயலாளா் மல்லியம் ரவி வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் முத்து.சாமிநாதன், வட்டார தலைவா் (வடக்கு) அன்பழகன், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவா் மிலிட்டரி செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா். நகர பொதுச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.