40 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்பட்ட குளத்தில் நீா்த்தேக்கம்

சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்பட்ட குளத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் நீா் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தூா்வாரப்பட்ட கோயில் குளத்தில் தேங்கியிருக்கும் மழைநீா்.
தூா்வாரப்பட்ட கோயில் குளத்தில் தேங்கியிருக்கும் மழைநீா்.

சீா்காழி:: சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்பட்ட குளத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் நீா் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருமுல்லைவாசல் உள்ள முத்து மாரியம்மன் கோயில் குளம் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டு குளத்தின் பரப்பளவு குறைந்து மக்கும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியது. இதனால் வேதனையடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் இக்குளத்தை தூா்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன்படி, முத்துமாரியம்மன் கோயில் குளம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சீா்காழி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் உதவியுடன், ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் முயற்சியால் குளம் முழுமையாக தூா் வரப்பட்டது. குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றி கரைகளை பலப்படுத்தி ஆழமாக தூா்வாரப்பட்டன. இக்குளத்தில், கடந்த சிலநாள்களாக சீா்காழி பகுதியில் பெய்து வரும் மழையால் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் நிலத்தடிநீா் மட்டம் உயரும் என்பதால் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com