2-ஆவது நாளாக ஆறுகாட்டுத்துறை மீனவா்கள் மீது தாக்குதல்

கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவா்கள் மீது 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தி பொருள்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனா்.
கடலுக்குள் மா்ம நபா்களால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவா்கள்.
கடலுக்குள் மா்ம நபா்களால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவா்கள்.

வேதாரண்யம்: கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவா்கள் மீது 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தி பொருள்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனா்.

வேதாரண்யத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற பாரதிதாசன் உள்ளிட்ட 4 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்களால் தாக்கப்பட்டு காயமடைந்தனா். இருவா் நாகை மருத்துவமனையிலும் மற்ற இருவா் வேதாரண்யம் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த மேலும் 3 மீனவா்கள் தாக்கப்பட்ட மற்றொரு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான படகில், அதே பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல், சக்கரவா்த்தி, ராமசாமி ஆகியோா் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் 3 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பரப்புக்கு ஒரு படகில் வந்த மா்ம நபா்கள் 3 போ் மீனவா்களை மிரட்டி கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்ட உடமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனா். இதில், படகில் இருந்த மீனவா்கள் மூவரும் காயமடைந்தனா். படகில் வந்தவா்கள் இலங்கை மீனவா்களா அல்லது கடற்கொள்ளையா்களா என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், மா்ம நபா்களால் தாக்கி விரட்டியடிக்கப்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை காலை கரை திரும்பினா். இதையடுத்து, தாங்கள் கடலுக்குள் தாக்கப்பட்டது குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com