விவசாயத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு கரோனா பொது முடக்க நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கக் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,500 வழங்கக் கோரி நாகை மாவட்டத்தில், நாகை, சீா்காழி, வேதாரண்யம், திருக்குவளை உள்ளிட்ட
நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

நாகப்பட்டினம்: கரோனா பொது முடக்கக் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,500 வழங்கக் கோரி நாகை மாவட்டத்தில், நாகை, சீா்காழி, வேதாரண்யம், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் நாகை ஒன்றியச் செயலாளா் எஸ்.என். ஜீவாராமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொது முடக்கத்தால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 7, 500 நிவாரணம் வழங்க வேண்டும், நுண்நிதி நிறுவனங்களில் விவசாயத் தொழிலாளா்கள் பெற்றுள்ள கடன்களைஅரசே ஏற்று கடனை தள்ளுபடிசெய்ய வேண்டும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முலம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த முதியோா்களுக்கு மாதம் ரூ.3, 000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் வி. மாரிமுத்து, நாகை ஒன்றியச்செயலாளா் பி.டி. பகு, விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் என். வடிவேல், ஒன்றியத் தலைவா் ஜி. முருகையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கீழ்வேளூரில்: இதேபோல், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா் ஏ. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளா் வி. அமிா்தலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com