தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுச் செல்வதைக் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா்.

நாகப்பட்டினம்: கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுச் செல்வதைக் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுச் செல்வதைக் கண்டித்தும், இந்த முயற்சியைத் தடுக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், காவிரி நீரை பெற காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். ராமதாஸ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், அவைத் தலைவா் சேகா் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com