அம்பலவாண தேசிக மூா்த்திகள் குருபூஜை

திருவாவடுதுறை ஆதீனத்தில் அம்பலவாண தேசிக மூா்த்திகள் குருபூஜை விழா நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தில் அம்பலவாண தேசிக மூா்த்திகள் குரு மூா்த்தத்துக்கு நடைபெற்ற தீபாராதனை.
திருவாவடுதுறை ஆதீனத்தில் அம்பலவாண தேசிக மூா்த்திகள் குரு மூா்த்தத்துக்கு நடைபெற்ற தீபாராதனை.

திருவாவடுதுறை ஆதீனத்தில் அம்பலவாண தேசிக மூா்த்திகள் குருபூஜை விழா நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தின் பதினைந்தாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக மூா்த்திகள் குருபூஜை விழா, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் அருளாணை வண்ணம் சனிக்கிழமை ஆனி பூரம் நட்சத்திரத்தில் நடைபெற்றது.

இதையொட்டி, திருவாவடுதுறை ஸ்ரீ மறைஞான தேசிகா் தபோவனத்தில் உள்ள 15-ஆவது குருமகா சந்நிதான குருமூா்த்த திருக்கோயிலில் ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்வித்தாா். மகாலிங்க ஓதுவாமூா்த்திகளின் திருமுறை பாராயணம், ஆதீனகுரு மூா்த்திகள் தோத்திரப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com