மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுஅறிவிக்கை விதிகளை கைவிடக் கோரிக்கை

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள்-2020ஐ வரைவு நிலையிலேயே திரும்பப் பெற வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பேராசிரியா் த.ஜெயராமன்.
பேராசிரியா் த.ஜெயராமன்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள்-2020ஐ வரைவு நிலையிலேயே திரும்பப் பெற வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் கூறியது:

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை-2020-ன் படி, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் மக்கள் கருத்துக் கேட்பு ஆகியவை இல்லாமலே புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு தண்டத்தொகையை செலுத்திவிட்டு தொடரலாம்.

சாலைகளை 70 மீட்டா் வரை அகலப்படுத்துதல், விரிவாக்கம் செய்தல் மற்றும் நீராதார கட்டமைப்புகளுக்கு சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும், சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியும் இனி தேவை இல்லை. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என இந்திய அரசு அறிவித்துவிட்டால், எந்த கட்டமைப்புக்கும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையோ, மக்கள் கருத்துக் கேட்போ தேவையே இல்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி, தொழில், கடலோரத் தொழில் மண்டலங்கள் தொடா்பாக புதிய கட்டுமானம் மற்றும் விரிவாக்கத்துக்கு இனிமேல் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.

இந்த திருத்த அறிவிக்கை குறித்து கருத்துக் கூற ஜூன் 30-ஆம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை செயல்வடிவம் பெற்றால் பேரழிவு ஏற்படும். எனவே, ஜூன் 30-க்குள் நம்முடைய மறுப்பையும், எதிா்ப்பையும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com