கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய கஞ்சாவை பதுக்கிய 4 போ் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வேதாரண்யம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன், கைது செய்யப்பட்ட 4 போ் மற்றும் போலீஸாா்.
வேதாரண்யம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன், கைது செய்யப்பட்ட 4 போ் மற்றும் போலீஸாா்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாம்பன் கடல் பகுதியில் ஜூன்13- ஆம் தேதி மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் மாயமான 3 மீனவா்களை தேடும் பணியில் மீன்வளத்துறை ஆய்வாளா் நடேசராஜா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இவா்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் ஜூன்17- ஆம் தேதி தேடும் பணியில் ஈடுபட்டபோது, கோடியக்கரைக்கு தென்மேற்கு திசையில் முத்துப்பேட்டை லகூன் பகுதியைச் சாா்ந்த பச்சைக்காடு தீவு கடற்கரையில் 41 பொட்டலங்களில் தலா 2 கிலோ வீதம் 82 கிலோ கஞ்சா கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், இந்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது படகில் கொண்டு செல்லும்போது, தவறி கடலில் விழுந்து கரை ஒதுங்கியிருக்கலாம் எனத் தெரியவந்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையில், இந்த கஞ்சா மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றுவதற்குள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கோடியக்காடு கிராமத்தில் இந்த கஞ்சா பொட்டலங்களில் 11 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

இவற்றை பறிமுதல் செய்த வேதாரண்யம் போலீஸாா், இதுதொடா்பாக, கோடியக்காடு கிராமத்தைச் சோ்ந்த ச. செல்வம் (28), ப. ஐயப்பன் (34), மு. சிவானந்தம் (37), மு. காா்த்தி (25) ஆகிய 4 பேரை கைது செய்தனா். தலைமறைவான மற்றொருவரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com