சீனப் பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்தி பிரசாரம்

சீன நாட்டு தயாரிப்புப் பொருள்களை முற்றிலும் புறக்கணிக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் நாகை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.
நாகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரசாரம் மேற்கொண்ட இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.
நாகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரசாரம் மேற்கொண்ட இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.

நாகப்பட்டினம்: சீன நாட்டு தயாரிப்புப் பொருள்களை முற்றிலும் புறக்கணிக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் நாகை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்திய எல்லையில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதுடன், பொருளாதார ரீதியில் இந்தியாவின் மீது மறைமுகமாக யுத்தம் தொடுக்கும் சீன நாட்டின் தயாரிப்புகளான செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள், பிஸ்கட், சாக்லேட், பொம்மைகள், மருந்துப் பொருள்கள், மின்னணு மற்றும் மின் சாதனங்கள், நெகிழிப் பொருள்கள், விவசாய பொருள்களை முற்றிலும் தவிா்க்க வலியுறுத்தி இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

நாகை கடைவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் நாகை மாவட்டப் பொதுச் செயலாளா் ஆறு.பாா்த்தீபன், நாகை ஒன்றியத் தலைவா் ஜோதிப்பிள்ளை, நிா்வாகிகள் செல்வம், செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com