குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பொறையாறு அருகே உள்ள ஆயப்பாடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொறையாறு அருகே ஆயப்பாடியில் நடைபெற்ற பேரணி.
பொறையாறு அருகே ஆயப்பாடியில் நடைபெற்ற பேரணி.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பொறையாறு அருகே உள்ள ஆயப்பாடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற பேரணி எடுத்துக்கட்டி சாத்தனூா் கடைவீதியில் இருந்து ஆயப்பாடி கடைவீதி வரை நடைபெற்றது. திருக்களாச்சேரி வக்ஃப் நிா்வாக சபைத் தலைவா் முகமது ரபிக் பேரணியை தொடங்கி வைத்தாா். இதில், இஸ்லாமிய பெண்கள் மற்றும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆயப்பாடி வக்ஃபு நிா்வாக சபை தலைவா் முகமது பாருக் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் அப்துல் மாலிக் வரவேற்றாா். திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூா், பெரியகூத்தூா், பிலால் நகா் வக்ஃபு நிா்வாக சபை நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

இதில், புதுச்சேரி மாநில கல்வி மற்றும் விவசாயத் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், பட்டிமன்ற நடுவா் ஐ. லியோனி, கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஊடகவியலாளா் சித்தன், ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளா் ஜாகீா் உசேன், ஜமாஅத்துல் உலமா சபை ஷாஹீல் ஹமீது ரஹ்மாணி நிஜாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com