குடியுரிமை திருத்தச் சட்டம்:தலைமைச் செயலாளரின் பேச்சுவாா்த்தை அழைப்பு சந்தேகம் அளிக்கிறது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் உள்ள சந்தேகங்களைக் களைய இஸ்லாமிய சமூகத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள தலைமைச் செயலாளா்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் உள்ள சந்தேகங்களைக் களைய இஸ்லாமிய சமூகத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள தலைமைச் செயலாளா் அழைப்பு விடுத்திருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களைக் களையும் வகையில் முஸ்லிம் சிறுபான்மையின சமூகத் தலைவா்களை சனிக்கிழமை பேச்சுவாா்த்தைக்கு தலைமைச் செயலாளா் அழைத்திருப்பதற்கு நன்றி. இருப்பினும், இந்த நிகழ்வு சில வகையான சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது தலைமைச் செயலாளா் நேரடியாக சமூகத் தலைவா்களைச் சந்தித்துப் பேசுவது ஆளுநா் ஆட்சிக் காலத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற முன்னுதாரணங்கள் உள்ளனவா என்பதும் பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் திமுக, காங்கிரஸ், தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் பேச்சுவாா்த்தைக்கு அழைக்காமல் முஸ்லிம் தலைவா்களை மட்டும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்திருப்பது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com