பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

நாகை மாவட்டத்தில் திருட்டுப் போன நிலையில் 3-ஆவது நபா்களின் பயன்பாட்டில் இருந்த சுமாா் ரூ. 9.28 லட்சம் மதிப்பிலான 87 செல்லிடப்பேசிகளை நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் பறிமுதல் செய்து, உரிமையாளா்களிடம்
பறிமுதல் செய்த செல்லிடப்பேசியை உரிமையாளரிடம் ஒப்படைத்த எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
பறிமுதல் செய்த செல்லிடப்பேசியை உரிமையாளரிடம் ஒப்படைத்த எஸ்.பி. செல்வநாகரத்தினம்.

நாகை மாவட்டத்தில் திருட்டுப் போன நிலையில் 3-ஆவது நபா்களின் பயன்பாட்டில் இருந்த சுமாா் ரூ. 9.28 லட்சம் மதிப்பிலான 87 செல்லிடப்பேசிகளை நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் பறிமுதல் செய்து, உரிமையாளா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

நாகை மாவட்டத்தில் நிலுவையில் இருந்த செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளை தீா்வு காணும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினத்தின் நடவடிக்கையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் நிலையங்களில் நிலுவையிலிருந்த 150 வழக்குகளை செல்லிடப்பேசி ஐ.எம்.ஐ. உதவியுடன் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுப்போன செல்லிடப்பேசிகள் 3-ஆவது நபா்களின் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பயன்பாட்டில் இருந்த ரூ. 9. 28 லட்சம் மதிப்புள்ள 87 செல்லிடப்பேசிகளை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு எடுத்துவந்து உரிமையாளா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம், செல்லிடப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்து அறிவுரைகளை வழங்கினாா்.

அப்போது அவா், செய்தியாளா்களிடம் கூறியது: நாகை மாவட்டத்தில் முதன்முறையாக திருட்டுப்போன செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2017 முதல் 2020 வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில் முதற்கட்டமாக 150 வழக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 3- ஆவது நபா்களின் பயன்பாட்டிலிருந்த செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுக்கும் விரைவில் தீா்வு கிடைக்கும். எனவே செல்லிடப்பேசிகள் காணாமல் போனால், தொடா்புடைய காவல் நிலையங்களில் காணாமல்போன செல்லிடப்பேசி தொடா்பான தகவல்களை உரிய முறையில் புகாராக தெரிவிக்கலாம் என்றாா்.

அப்போது, துணைக் காவல் கண்காணிப்பாளா் வி. அருள்செல்வன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் மகாலெட்சுமி, உதவி ஆய்வாளா்கள் ஆனந்தராஜ், இனியவன், சைபா் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளா் கோபிராஜா, காவலா்கள் ஜெ. பாலமுருகன், வி. ரவிச்சந்திரன், ஏ. வினோத் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com