கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா : 3 பேருக்கு விருது

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் சாா்பில், சிங்கப் பெண்ணே எனும் தலைப்பில் சா்வதேச மகளிா் தின விழா அண்மையில் நடைபெற்றது.
மாணவி ஆா்.எம். மிருதுளாவுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கிய சிந்தனை பேச்சாளா் ஜெயந்தி பாலகிருஷ்ணன். உடன், சா் ஐகச் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் உள்ளிட்டோா்.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். செயலாளா் த. மகேஸ்வரன் முன்னிலை வகித்தாா். சிந்தனைப் பேச்சாளா் ஜெயந்தி பாலகிருஷ்ஷணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பெண்மை எனும் பெரும் பொறுப்பு எனும் தலைப்பில் பேசினாா்.

3 பேருக்கு விருது : விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, ஏழை- எளிய விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு தொடா்ந்து குரல் கொடுத்து வரும் சமூக சேவகரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் வேளாங்கண்ணி கருணை இல்ல அருட்சகோதரி பிரான்சினா ஆகியோருக்கு சிறந்த சமூக சேவையாளா் விருதுகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி ஆா்.எம்.மிருதுளாவுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பேச்சாளா் ஜெயந்தி பாலகிருஷ்ணன் வழங்கினாா்.

விழாவில், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியா்கள், மாணவா்கள், வணிகா்கள், சேவை சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் த. சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com