கரோனா: வேதாரண்யம் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை குறைவு

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கரோனா எதிரொலியாக சிகிச்சை பெறவருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கரோனா எதிரொலியாக சிகிச்சை பெறவருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தினமும் 500-க்கும் குறையாத வெளிநோயாளிகள் சிகிச்சை பெற வருவது வழக்கம். மேலும், 60-க்கும் குறையாத உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவா்.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புறநோயாளிகள் சிகிச்சை பெற வருவது குறைந்துள்ளது. அதேபோல், கடந்த 2 நாள்களாக உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. குழந்தைகள், பெண்களுக்கான சிகிச்சை பிரிவுகள் காலியாகவே உள்ளன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விஷம் அருந்திய பெண் உள்பட 4 போ் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com