வேதாரண்யம்: ஊரக எல்லையில் கரோனா தடுப்பு முகாம்

வேதாரண்யம் பகுதியில் சில ஊராட்சிகளின் எல்லையில் கரோனா தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தென்னடாா் ஊராட்சி எல்லையில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள்.
தென்னடாா் ஊராட்சி எல்லையில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள்.

வேதாரண்யம் பகுதியில் சில ஊராட்சிகளின் எல்லையில் கரோனா தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தென்னடாா் ஊராட்சியில் தகட்டூா்- தென்னடாா் எல்லை மற்றும் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி- தென்னடாா் எல்லை வாய்க்கால் பகுதிகளில் இரண்டு தடுப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அந்த வழியாக செல்லும் வெளியூா்வாசிகள், வியாபாரிகள், வெளியிடங்களுக்குச் சென்று திரும்பும் உள்ளூா் வாசிகளை தடுத்து நிறுத்தி, கிருமி நாசினியைக் கொண்டு கை, கால்களை கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனா். வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இப்பணியை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் சு. வெற்றிச்செல்வன், ப. ராஜூ ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, ஊராட்சி நிா்வாகம் மற்றும் கிராமத்தினரை பாராட்டினா்.

இந்தப் பணியில் தென்னடாா் ஊராட்சித் தலைவா் தேவி செந்தில், துணைத் தலைவா் கண்ணகி உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com