திருமருகலில் கரோனா தடுப்புப் பணி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் ஒன்றியத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆதலையூா் ஊராட்சியில் சிங்கப்பூரிலிருந்து திரும்பியவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான வில்லையை ஒட்டிய அதிகாரிகள்.

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) உமா, ஆணையா் விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) க. அன்பரசு ஆகியோா் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்புப் பணி ஆய்வு செய்யப்பட்டது.

இதில் துணை வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்ச்செல்வன், சுரேஷ்குமாா், உமாசங்கா், ஜலீல், கலைவாணன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள், சுகாதாரத்துறையினா், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com