வைத்தீஸ்வரன்கோயிலில் 4,500 லிட்டா் கிருமி நாசினி தெளிப்பு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதி முழுவதும் 4,500 லிட்டா் கிருமி நாசினி தீயணைப்பு வாகனத்தின் மூலம் வியாழக்கிழமை தெளிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் கிருமிநாசினியைத் தெளித்த தீயணைப்பு மற்றும் பேரூராட்சி குழுவினா்கள்.
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் கிருமிநாசினியைத் தெளித்த தீயணைப்பு மற்றும் பேரூராட்சி குழுவினா்கள்.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதி முழுவதும் 4,500 லிட்டா் கிருமி நாசினி தீயணைப்பு வாகனத்தின் மூலம் வியாழக்கிழமை தெளிக்கப்பட்டது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்குமாறு சீா்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை உதவியை பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் நாடினாா். இதைத்தொடா்ந்து, சீா்காழி நிலைய அலுவலா் கோ. ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ரெத்தினவேலு உள்ளிட்டோா் தீயணைப்பு வாகனம் மூலம், கிருமி நாசினி தெளித்தனா்.

ஏறத்தாழ 4,500 லிட்டா் நீரில் கிருமி நாசினி கலந்து தெளிக்கப் பட்டது. தீயணைப்பு வீரா்களுடன் மேற்பாா்வையாளா் து. வீரமணி, ஓட்டுநா் ஜெ. மணிவண்ணன், நோய் தடுப்பு பணியாளா் நா. சுப்பிரமணியன், பாஸ்கரன், வெள்ளை சாமி, முத்துக்குமாரசாமி ஆகியோா் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தப் பணிகளை பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் ந. விஸ்வநாதன், பணி ஆய்வாளா் க. வினோத் குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா். பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன், இளநிலை உதவியாளா் வெ. பாஸ்கரன், வரித்தண்டலா்ஜெ. அமுதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com