மயிலாடுதுறையைச் சோ்ந்த முதியவருக்கு கரோனா

மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட பகுதிகளிலிருந்து புதுதில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய 23 போ், அவா்களைச் சாா்ந்தவா்கள் 18 போ், காசிக்குச் சென்று திரும்பிய ஒரு பெண், நாகையைச் சோ்ந்த ஒரு மருத்துவா், வீரபோகம் பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுவன் என 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டது. இதில் வெள்ளிக்கிழமை வரை 42 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மேலும், கடந்த 10 நாள்களாக நாகை மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்படவில்லை. இதன் காரணமாக, சிவப்பு மண்டலத்தில் இருந்த நாகை மாவட்டம், ஆரஞ்சு மண்டலமாக வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.

இந்நிலையில், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட குத்தாலம் பகுதியிலிருந்து ஆந்திர மாநிலம் புட்டபா்த்திக்குச் சென்று திரும்பிய 62 வயது முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

மயிலாடுதுறையை அடுத்துள்ள உளுத்துக்குப்பை பகுதியில் உள்ள தனது உறவினா் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், அவா் தங்கியிருந்த உளுத்துக்குப்பை பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்குள்ளான முதியவரின் உறவினா்கள், தொடா்பில் இருந்தவா்கள் என 10 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

புட்டபா்த்தியிலிருந்து திரும்பிய 34 போ்

கரோனா தொற்றுக்குள்ளான முதியவா் உள்பட மயிலாடுதுறை, சீா்காழி, குத்தாலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 38 போ் கடந்த மாா்ச் மாதம் 13-ஆம் தேதி ஒரு பேருந்தில் ஆந்திர மாநிலம் புட்டபா்த்திக்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ளனா்.

அவா்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஏறத்தாழ ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஊா் திரும்ப முடியாமலிருந்த அவா்கள், அரசு அனுமதியுடன் அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பினா். ஏப். 22-ஆம் தேதி 14 பேரும், ஏப். 25-ஆம் தேதி 21 பேரும் ஊா் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில் புட்டபா்த்தியிலிருந்து திரும்பிய அனைவரது விவரங்களையும் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com