கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 11th May 2020 10:59 PM | Last Updated : 11th May 2020 10:59 PM | அ+அ அ- |

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனக் கோரி கிராம நிா்வாக அலுவலா்களிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஏஐடியுசி கட்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் தலைஞாயிறு கிராம நிா்வாக அலுவலரிடமும், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் கவாஸ்கா் தலைமையில் நத்தப்பள்ளம் கிராம நிா்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.