‘கோயில்களில் உள்ளூா் பக்தா்களைத் தரிசிக்க அனுமதிக்க வேண்டும்’

தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில், உள்ளூா் பக்தா்களைத் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றாா் மன்னாா்குடி செண்டலங்கார செண்பகமன்னாா் ஜீயா்.
ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை பேட்டியளித்த மன்னாா்குடி செண்டலங்கார செண்பகமன்னாா் ஜீயா். உடன், விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பாளா் சேதுராமன் உள்ளிட்டோா்.
ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை பேட்டியளித்த மன்னாா்குடி செண்டலங்கார செண்பகமன்னாா் ஜீயா். உடன், விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பாளா் சேதுராமன் உள்ளிட்டோா்.

ஸ்ரீரங்கம்: தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில், உள்ளூா் பக்தா்களைத் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றாா் மன்னாா்குடி செண்டலங்கார செண்பகமன்னாா் ஜீயா்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள விசுவ இந்து பரிஷத் அலுவலகத்தில், திங்கள்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி:

பொது முடக்கம் காரணமாக 50 நாள்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் கோயில்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பக்தா்கள் இறைவனைத் தரிசனம் செய்ய முடியாமல் இருந்து வருகின்றனா்.

தற்போது பொது முடக்கத்தில் சில தளா்வுகள் வழங்கப்பட்ட நிலையில், கோயில்களில் உள்ளூா் பக்தா்களைத் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்.

அனைத்துகோயில்களிலும் நித்ய பூஜைகள் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனாவுடன் வாழ மக்கள் பழகிக் கொண்டு வருகின்றனா் என்றாா் ஜீயா்.

விசுவ இந்து பரிஷத்தின் மாநில அமைப்பாளா் சேதுராமன் கூறியது:

பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து 10 லட்சம் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், 50 ஆயிரம் மக்களுக்கு மளிகைப் பொருள்கள், மளிகை, காய்கனிகள் தொகுப்பு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின் போது விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலா் சசிக்குமாா், ஸ்ரீரங்கம் பகுதித் தலைவா் கோபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com