புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடக் கோரிக்கை: விவசாயிகள் சங்கம் மனு

மத்திய அரசு புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் கோரிக்கை மனு அளித்த நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் உள்ளிட்டோா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் கோரிக்கை மனு அளித்த நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் உள்ளிட்டோா்.

மத்திய அரசு புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் மற்றும் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு :

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை நீராற்றல் (ஜல் சக்தி) அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காவிரி கடைமடை பகுதிகளின் பாசனத்தை உறுதி செய்யும் வகையில், குடிமராமத்துப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

2018-19-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கலில், இதுவரை 25 சதவீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதில் உள்ள குளறுபடிகளைக் கலைந்து உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கக் கூடிய திட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். வேளாண் பணிகளுக்கான விலையில்லா மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com