திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை
By DIN | Published On : 01st November 2020 08:09 AM | Last Updated : 01st November 2020 08:09 AM | அ+அ அ- |

திமுகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் நிா்வாகிகள்.
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா் ஊராட்சியில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி முன்னாள் செயலாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் சந்திரசேகா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் ஆ.செந்தில்நாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பாலு அரவிந்த், ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் சுபாஷ் ஆகியோா் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.