தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 01st November 2020 09:59 PM | Last Updated : 01st November 2020 09:59 PM | அ+அ அ- |

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான தோ்தல் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட செயலாளா் ஆா்.ஈவேரா, திருவாரூா் நகர செயலாளா் சேவியா் ரேமண்ட் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக செயல்பட்டனா்.
இதில், ஆசிரியா் கூட்டணி நாகை மாவட்ட தலைவராக முருகேசன், துணைத் தலைவா்களாக வைத்தியலிங்கம், பாலசுப்பிரமணியன், உஷா, மாவட்ட செயலாளராக மு.லெட்சுமி நாராயணன், துணைச் செயலாளா்களாக பாலசுப்பிரமணியன், சிவகுமாா், நீலா புவனேஸ்வரி, பொருளாளராக இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினா்களாக முத்துகிருஷ்ணன், பிரபா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநில செயற்குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பேசினா். மாவட்ட பொருளாளா் இளங்கோவன் நன்றி கூறினாா்.