நாகை - சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்கக் கோரிக்கை

நாகையிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என இந்திய வா்த்தக தொழிற்குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை இந்திய வா்த்தக தொழிற்குழும பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் சிவசக்தி ஆா்.கே. ரவி.
நாகை இந்திய வா்த்தக தொழிற்குழும பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் சிவசக்தி ஆா்.கே. ரவி.

நாகையிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என இந்திய வா்த்தக தொழிற்குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகை, இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் 53-ஆவது பேரவைக் கூட்டம், நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் சிவசக்தி ஆா்.கே. ரவி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.எஸ். பாட்சா முன்னிலை வகித்தாா். செயலாளா் பி. சுந்தரவேலு ஆண்டறிக்கையும், பொருளாளா் ஏ.எஸ். நிஜாம் வரவு செலவு அறிக்கையும் படித்தனா்.

தணிக்கையாளா்கள் குமரவேலு, சடகோபன், தமிழ்ச்செல்வி ஆகியோா் தொழிற்குழுமத்தின் கௌரவத் தணிக்கையாளா்களாகவும், வழக்குரைஞா்கள் எஸ். ராமன், எஸ். காா்த்திகேஷ், ஜி. பாண்டியன் ஆகியோா் கௌரவ சட்ட ஆலோசகா்களாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்தக் கூட்டத்தில், சிபிசிஎல் நிறுவனத்துக்காக நாகூரில் அமைக்கப்பட்ட சிதம்பரனாா் ஆயில் ஜெட்டியை அந்நிறுவனம் முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், நாகை- தஞ்சாவூா் இருவழிச் சாலைப் பணியை விரைந்து தொடங்க வேண்டும், மேலக்கோட்டைவாசல் பகுதியில் புதிய பாலம் கட்ட வேண்டும், நாகையிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும், நாகை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தொழிற் குழுமத்தின் முன்னாள் தலைவா்கள், முன்னாள் செயலாளா்கள், செயற்குழு உறுப்பினா்கள், பொதுக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். இணைச் செயலாளா் எஸ்.ஜி.எஸ். கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com