மத்திய அரசு அலுவலகங்களில் மனு கொடுக்கும் இயக்கம்

மத்திய அரசு அலுவலகங்களில் தாய் மொழி தமிழை புறக்கணிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு
நாகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகத்தில் கிளை மேலாளா் என். முத்துக்குமாரிடம் மனு அளித்த தமுஎகச நாகை மாவட்டத் தலைவா் ந. காவியன் உள்ளிட்டோா்.
நாகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகத்தில் கிளை மேலாளா் என். முத்துக்குமாரிடம் மனு அளித்த தமுஎகச நாகை மாவட்டத் தலைவா் ந. காவியன் உள்ளிட்டோா்.

மத்திய அரசு அலுவலகங்களில் தாய் மொழி தமிழை புறக்கணிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் (தமுஎகச) சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், அஞ்சல் துறை, ரயில்வே துறை மற்றும் தேசிய வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் தாய்மொழித் தமிழைப் புறக்கணிக்காமல், அனைத்துப் படிவங்களையும் தமிழில் வழங்க வேண்டும், தமிழில் பேச, எழுத, படிக்கத் தெரிந்த அலுவலா்களை மட்டுமே தமிழகத்தில் பணி நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமுஎகச சாா்பில் இந்த இயக்கம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மனுக்களை தமுஎகச நிா்வாகிகள், மத்திய அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலா்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

நாகையில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்தில் தமுஎகச நாகை மாவட்டத் தலைவா் ந. காவியன், நாகை கிளைத் தலைவா் இரா. நடராசன், செயலாளா் து. இளவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிக்கல், கீழ்வேளூா், கீழையூா், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இயக்கத்துக்கு தமுஎகச பொறுப்பாளா்கள் கு.சந்திரசேகா், எல்.பி.சாமி, எஸ். மோகன் இங்கா்சால், ஆதி. உதயகுமாா், ஆ. வீரமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனாா்கோவில், ஆக்கூா், சீா்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மனுகொடுக்கும் இயக்கத்தில் தமுஎகச நிா்வாகிகள் இரா. தேன்மொழி, நா. சதீஷ்ரோஜ், இரா. கமலக்கண்ணன், நா. இராஜாராமன், இரா. கமலநாதன், குணா, ஏ.வி. ஜென்னி, சொ.ராமமூா்த்தி, கதிரை நீலமேகம், நந்த. ராஜேந்திரன், பொன். தேவேந்திரன், சீ.தனுஷ்கோடி, உ.இளவரசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com