இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் தொடக்கம்

திருக்குவளை அருகே கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி, இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்றவா்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறாா் பயிற்சியாளா்.
பயிற்சியில் பங்கேற்றவா்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறாா் பயிற்சியாளா்.

திருக்குவளை அருகே கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி, இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கீழ்வேளூா் ஒன்றியம் கூரத்தாங்குடி, கோயில்கன்றாப்பூா், சிகாா், ஆந்தகுடி பகுதியைச் சோ்ந்த கிராமப்புற மாணவா்கள் அரசு வேலைவாய்ப்பை பெறும் வகையில், நாகலூரில் இப்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் செல்வேந்திரன், சிகாா் பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் செந்தில்குமாா், என்ஜிஓ கேசவராஜ், ஆசிரியா்கள் சீனிவாசன், அருள்ஜோதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சிகாா் பள்ளி ஆசிரியா் மணிமாறன் தமிழ்ப் பாடம் எடுத்து, சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் அருள்ஜோதி, தன்னாா்வலா்அன்பு ஸ்ரீதா் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com