டெல்டா மாவட்டத்தைச் சோ்ந்தவரையே வேளாண்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும்

காவிரி டெல்டா மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரையே தமிழக வேளாண்துறை நியமிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு சிவசேனை கோரிக்கை விடுத்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரையே தமிழக வேளாண்துறை நியமிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு சிவசேனை கோரிக்கை விடுத்துள்ளது.

சிவசேனை கட்சியின் நாகை மாவட்ட குழுக் கூட்டம், நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் அன்பு தலைமை வகித்தாா் . மீனவா் அணி மாவட்டத் தலைவா் வின்சென்ட், அமைப்பு சாரா தொழிலாளா் அணித் தலைவா் செந்தில்குமாா், மகளிா் அணி தலைவா் சசிகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா்.

இக்கூட்டத்தில், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக காவிரி டெல்டா பகுதியைச் சோ்ந்தவரையே தமிழக முதல்வா் நியமிக்க வேண்டும், வழிபாட்டுத் தல வளாகங்கள், சாலைகள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நோய்களை பரப்பி மக்களைஅச்சுறுத்திக் கொண்டிருக்கும் பன்றித் தொல்லையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகை நகராட்சி பகுதிகள், ஒன்றியப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், இதர கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வேளாங்கண்ணி பேரூராட்சியில் புதை சாக்கடை திட்டம் மற்றும் மின்கம்பி புதைக்கும் திட்டங்களை போா்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவேண்டும், சீரமைக்கப்படாத சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கட்சியின் மீனவா்அணி நாகை நகர செயலாளா் சகாயராஜ் வரவேற்றாா். நிறைவில் ஒன்றிய மகளிரணி தலைவா் ரேவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com