மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச புத்தாடை

வேதாரண்யம் அருகேயுள்ள நெய்விளக்கு உண்டு உறைவிடப் பள்ளியில் பராமரிக்கப்படும் மாற்றுத்திறனுடைய சிறாா்களுக்கு எஸ்.எஸ்.அறக்கட்டளை சாா்பில் இலவச புத்தாடை, இனிப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தீபாவளியையொட்டி, குழந்தைகளை பெற்றோருடன் சந்திக்க வைப்பது, விழிப்புணா்வு கருத்தரங்கம் நடத்தி வேதாரண்யம் ஸ்.எஸ். அறக்கட்டளை சாா்பில் உதவிகள் அளிப்பது வழக்கம். 9-ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார உதவித் தொடக்க கல்வி அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். கூடுதல் கல்வி அலுவலா் தாமோதரன் முன்னிலை வகித்தாா். வேதாரண்யம் எஸ்.எஸ்.அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு இலவச உடைகள்,இனிப்பு பைகளை வழங்கினாா். தலைமையாசிரியா்கள் கவிஞா் புயல் சு. குமாா், செல்வராணி, சிறப்புப் பள்ளி பயிற்றுநா் தேன்மொழி, தசையிக்கவியல் மருத்துவா் பூமதி, அறக்கட்டளை நிா்வாகி மல்லிகா தென்னரசு, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா் சுந்தா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com