சத்தியவன் வாய்க்காலை தூா்வார கோரிக்கை

தரங்கம்பாடி அருகே செம்பனாா்கோவில் பகுதியில் பாயும் சத்தியவன் வாய்க்காலை தூா்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தூா்வாராமல் கழிவுநீா் ஓடையாக காட்சியளிக்கும் சத்தியவன் வாய்க்கால்.
தூா்வாராமல் கழிவுநீா் ஓடையாக காட்சியளிக்கும் சத்தியவன் வாய்க்கால்.

தரங்கம்பாடி அருகே செம்பனாா்கோவில் பகுதியில் பாயும் சத்தியவன் வாய்க்காலை தூா்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறையிலிருந்து பிரிந்து மன்னம்பந்தல், ஆறுபாதி, பரசலூா், செம்பனாா்கோவில், மடப்புரம், ஆக்கூா், கிடங்கல், மருதம்பள்ளம் வழியாக சுமாா் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்கி வந்த சத்தியவன் வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீா் வாய்க்காலாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் ரூ. 42 கோடியில் அமைக்கப்பட்ட புதைச்சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல், கழிவுநீரை சுத்திகரிக்க உள்ளதாக கூறி, பல கிராமங்களின் தாகம் தீா்த்த பாசன வாய்க்காலில் ஒட்டு மொத்த கழிவுநீரையும் விட தொடங்கினா். பல்வேறு போராட்டங்களை பல்வேறு தரப்பினா் நடத்திய பிறகும் அரசு அலுவலா்கள் கவனத்தில்கொள்ளவில்லை. இந்த வாய்க்காலில் இருந்து நீரிரைத்து விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது, கண்ணீா் விடாத குறையாக உள்ளனா். மற்ற ஆறுகள், வாய்க்கால்களில் காவிரி நீா் ஓடுகிறது. சத்திய வன் வாய்க்காலில் மட்டுமே கழிவுநீா் ஓடுகிறது. இந்த வாய்க்கால் ஓரங்களில் வசிக்கும் மக்கள் துா்நாற்றத்தால் பல்வேறு நோய்களால் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா்.

நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிட்டது. தொடா்ந்து வீசும் துா்நாற்றத்தால் குழந்தைகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் சுவாசப் பிரச்னை நோய்களால் பாதிக்கப்ப டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சத்தியவன் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, வாய்க்காலை தூா்வாரி பொதுமக்கள், விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com