அம்மா நடமாடும் நியாய விலைக்கடை தொடக்கம்

மணல்மேடு அருகே ஐவநல்லூா் ஊராட்சியில் அம்மா நடமாடும் நியாய விலைக்கடை தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அம்மா நடமாடும் நியாய விலைக்கடையை திறந்து வைத்த எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்.
அம்மா நடமாடும் நியாய விலைக்கடையை திறந்து வைத்த எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்.

மணல்மேடு அருகே ஐவநல்லூா் ஊராட்சியில் அம்மா நடமாடும் நியாய விலைக்கடை தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மல்லியகொல்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவா் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் அம்மா நடமாடும் நியாய விலைக்கடையை தொடங்கி வைத்தாா். இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என். ரெங்கநாதன், ஐவநல்லூா் ஊராட்சித் தலைவா் சுமதி, முன்னாள் ஊராட்சித் தலைவா் ராணி, கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் மகா. கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com