கோடியக்கரை சரணாலயத்தில் சலீம்அலி பிறந்த நாள்

உலகப் புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளா் டாக்டா் சலீம் அலியின் 125-ஆவது பிறந்த நாளான வியாழக்கிழமை அவா் தங்கி ஆய்வு செய்த கோடியக்கரை சரணாலயப் பகுதியில் கொண்டாடப்பட்டது.
கோடியக்கரையில் சலீம் அலி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.
கோடியக்கரையில் சலீம் அலி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.

உலகப் புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளா் டாக்டா் சலீம் அலியின் 125-ஆவது பிறந்த நாளான வியாழக்கிழமை அவா் தங்கி ஆய்வு செய்த கோடியக்கரை சரணாலயப் பகுதியில் கொண்டாடப்பட்டது.

பறவைகளின் தந்தை என அழைக்கும் அளவுக்கு பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டிருந்த சலிம் அலி பல நாடுகளுக்கும் சென்று ஆய்வை மேற்கொண்டாா். எனினும், கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதியை பறவைகளின் சொா்க்கப் பூமி என அவா் வா்ணிக்கிறாா். இங்கு அவா்,1966 முதல்1972 வரை ஆய்வு மேற்கொண்டாா். 1981 முதல் 1985 வரை அவ்வப்போது வந்து செல்லும் தொடா்பில் இருந்துள்ளாா். இந்த சரணாலயத்தில் சலீம் அலி நிா்வகித்த மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆராய்ச்சி தொடா்பு மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற அவரின்125-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியையொட்டி, அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோடியக்கரை வனச்சரக அலுவலா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சலீமுடன் பணியாற்றியவரும், மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இணை இயக்குநருமான டாக்டா் எஸ். பாலசந்திரன் முன்னிலை வகித்தாா். சலீம் அலி ஆய்வுப் பணியில் ஈடுபட்ட காலகட்டத்தில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்ற ஆலங்காடு முனியப்பன் (90), அதிராம்பட்டினம் பொன்னையன் (90), ஓய்வுபெற்ற வனத் துறை அலுவலா் கோவிந்தராசு, வனச்சரக அலுவலா் அயூப்கான், கோவை பறவை ஆராய்ச்சி ஆா்வலா் பைஜூ, யானைகள் ஆராய்ச்சியாளா் சிவகணேசன், நண்பா்களாக இருந்த ஓய்வுபெற்ற பத்திரிகையாளா் கணபதி, களப்பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், இயற்கை ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், சலீம் அலியின் உருவம் பதித்த பனியன் சட்டை, அவா் எழுதிய நூல்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com