நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில்

கிராமப்புற தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் நவ. 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராமப்புற தொழில்முனைவோரை ஊக்குவிக்கம் வகையில் நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டம் நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மூலம் 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் ரூ. 15 ஆயிரத்துக்கு 1,000 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். மேலும், தீவனத்துக்கு 50 சதவீத மானியமாக ரூ. 22,500, கோழிக்குஞ்சு பொறிக்கும் கருவிக்கு 50 சதவீத மானியமாக ரூ. 37,500 வழங்கப்படும். கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, கோழிகளைப் பராமரிக்க உதவிகள் செய்யப்படும்.

இத்திட்டத்தின்கீழ், வட்டாரத்துக்குத் தலா 5 போ் வீதம் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். இதில், 30 சதவீத ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும். ஆதரவற்றவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் நிரந்தர முகவரியில் வசிப்பவராகவும், விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் மற்றும் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெறாதவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2,500 சதுர மீட்டா் பரப்பில் கோழிக் கொட்டகை கொண்டவா்களாகவும், கோழிகளின் பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ளத் தகுதியானவராகவும் இருக்க வேண்டும். விருப்பம் மற்றும் தகுதியுடையவா்கள் தொடா்புடைய பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவரை அணுகி நவ.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com