சோழவித்தியாபுரத்தில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு

கீழையூா் அருகே உள்ள சோழவித்தியாபுரம் ஊராட்சியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

கீழையூா் அருகே உள்ள சோழவித்தியாபுரம் ஊராட்சியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடையில் 650 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

இதில், அன்னை நகா் பகுதியைச் சோ்ந்த 175 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் வடிவேல் தலைமை வகித்தாா். தலைவா் பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் நகரும் நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

ஊராட்சித் தலைவா் கோமதி தமிழ்ச்செல்வம், கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பால்ராஜ், கீழையூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவாய்மூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சதீஷ், சோழவித்யாபுரம் ஊராட்சி துணைத் தலைவா் சிவஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com