நாகை சமூக நலத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 44, 500 பறிமுதல்

நாகை மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் சோதனை
நாகை சமூக நலத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 44, 500 பறிமுதல்

நாகை மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ. 44, 500 பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை நீலா தெற்கு வீதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக கட்டடத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் வரதட்சணை தடுப்பு ஆலோசனை பிரிவு அலுவலகத்தில் பணப் புழக்கம் அதிகம் இருப்பதாக கிடைத்தத் தகவலின்பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எஸ். மனோகா், ஆய்வாளா்கள் ஏ. அருள்பிரியா, ஏ. ரமேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை மாலை அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையின்போது அலுவலக கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 44, 500 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து மாவட்ட சமூக நல அலுவலா் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா். செவ்வாய்க்கிழமை மாலை 6 30 மணிக்குத் தொடங்கிய சோதனை, இரவு 9 மணிக்கும் பிறகும் நீடித்தது. யாரும் கைது செய்யப்படவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 44,500 ரொக்கம் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் , தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், போன்ற திட்டங்களின்கீழ் பயன்பெற விண்ணப்பிப்பவா்களிடமிருந்து, ஊராட்சி ஒன்றிய அளவில் பணிபுரியும் அலுவலா்கள் வசூல் செய்து வந்ததாக இருக்கலாம் என்று ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com