பணியிட மாறுதல்: வேளாண் அமைச்சுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணியிட மாறுதலில் சீரான நடைமுறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா் நாகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா்.

பணியிட மாறுதலில் சீரான நடைமுறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா் நாகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் உருவாக்கப்பட்ட நிலையில், ஆட்சி அலுவலா் பணியிடம் உருவாக்கவேண்டும்; வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் உருவாக்க வேண்டும்; வேளாண்மை பொறியியல் துறை அமைச்சுப் பணியாளா்களின் மாறுதல்களில் சீரான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நாகை வட்டத் தலைவா் ஆா். சரவணன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் சு. சுதாகா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளா் சு. மணி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாகை வட்டப் பொறுப்பாளா் சீனிவாசராவ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com