இளம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அருங்காட்சியக
இளம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அருங்காட்சியக ஆணையரும், வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான எம்.எஸ். சண்முகம் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப் பணிகள் குறித்த அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது :

2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பா் 22, டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்றுத் தங்களுக்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள் குறித்தும், இளம் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரிய வகையில் விளம்பரப்படுத்தவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, கலால் உதவி ஆணையா் சுரேஷ், கோட்டாட்சியா்கள் இரா. பழனிகுமாா், வ. மகாராணி மற்றும் நகராட்சி ஆணையா்கள், வட்டாட்சியா்கள், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.

ஆய்வு...

முன்னதாக, குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்வேளூா் அஞ்சுவட்டத்து அம்மன் மேல்நிலைப்பள்ளி, காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களை எம்.எஸ். சண்முகம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com