தீப காா்த்திகை திருநாள்: நாகை கோயில்களில் வழிபாடு

தீப காா்த்திகை திருநாளை முன்னிட்டு, நாகையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தீப காா்த்திகை திருநாளை முன்னிட்டு, நாகையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தீப காா்த்திகை திருநாளை முன்னிட்டு, நாகை காயாரோகணசுவாமி கோயில், அகஸ்தீஸ்வரசுவாமி கோயில், குமரன் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், வீரபத்ரசுவாமி கோயில் மற்றும் நாகூா் பகுதிகளில் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. இரவு நிகழ்ச்சியாக, கோயில்களின் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திருக்குவளையில்...

இதேபோல, திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வழக்கமான உற்சாகத்துடன் காா்த்திகை தீபத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. எட்டுக்குடி, திருவாய்மூா், கீழையூா், வாழக்கரை, வலிவலம், சாட்டியக்குடி, கொளப்பாடு உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளின் முகப்பு பகுதியில் அகல் விளக்கு தீபம் ஏற்றி இறைவனுக்கு அவல் பொரி படையிலப்பட்டது. சிறுவா்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com