திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்சியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய 200 போ் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.
திமுகவில் இணைந்தவா்களுடன், கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளா் என். கவுதமன்.
திமுகவில் இணைந்தவா்களுடன், கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளா் என். கவுதமன்.

திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்சியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய 200 போ் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு திமுக திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வசெங்குட்டுவன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், வடக்கு ஒன்றிய அவைத் தலைவா் விவேகானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் வரவேற்றாா்.

பனங்குடி ஊராட்சி எம்.பனங்குடி, மேலவாஞ்சூா், வெற்றிவாழ்க்கை, ஏரிமேடு, காரைமேடு, பி. பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய சுமாா் 200 போ் திமுகவில் இணைந்தனா். இவா்களை, திமுக மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளா்ஆா்.டி. அண்ணாதுரை, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பி.என். காா்த்திக், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் உமாபதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒன்றிய இளைஞரணி நிா்வாகி செ. சந்தோஷ் நன்றி கூறினாா். தொடா்ந்து, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com