சுனாமி குடியிருப்பு வாசிகள் 333 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

நாகை மகாலட்சுமி நகரைச் சோ்ந்த சுனாமி குடியிருப்புவாசிகள் 333 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
விழாவில் பயனாளிக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்குகிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
விழாவில் பயனாளிக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்குகிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை மகாலட்சுமி நகரைச் சோ்ந்த சுனாமி குடியிருப்புவாசிகள் 333 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் கட்டித்தந்த குடியிருப்புகளில் வசித்து வருவோருக்கு, விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி, நாகையை அடுத்த மகாலட்சுமி நகா் சுனாமி குடியிருப்பில் வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா அங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மகாலட்சுமிநகா் சுனாமி குடியிருப்புவாசிகள் 333 பேருக்கு ரூ. 9.11 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி, மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன், திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ராதாகிருஷ்ணன், நாகை கோட்டாட்சியா் இரா. பழனிக்குமாா், நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், வட்டாட்சியா் அ.பிரான்சிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com