மன்னம்பந்தல் ஊராட்சி விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மன்னம்பந்தல் ஊராட்சி விவகாரத்தில் ஊராட்சித் தலைவருக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் நாகை மாலி உள்ளிட்டோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் நாகை மாலி உள்ளிட்டோா்.

மன்னம்பந்தல் ஊராட்சி விவகாரத்தில் ஊராட்சித் தலைவருக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் பிரியா பெரியசாமி. இவா், ஊராட்சி துணைத் தலைவா் அமலா, அவரது கணவா் ராஜகோபால் ஆகியோா் சாதி ரீதியாக தன்மீது பாகுபாடு காட்டுவதாகவும், வளா்ச்சிப் பணிகளுக்கு செலவிடும் தொகையில் கமிஷன் கேட்பதாகவும் கூறி கடந்த 12-ஆம் தேதி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, ஊராட்சித் துணைத் தலைவா் அமலா, அவரது கணவா் ராஜகோபால் ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமிக்கு நீதிகேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் நாகை மாலி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். துரைராஜ், ஜி. ஸ்டாலின், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் சி.வி.ஆா். ஜீவானந்தம், வட்ட செயலாளா் சி.மேகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சி செயலாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் க. அன்பரசுவிடம் வியாழக்கிழமை ஒரு நாள் விடுப்பு கடிதத்தை வழங்கி சிந்துஜா மீதான வழக்குக்கு தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.

திருக்குவளை: கீழையூா் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி செயலாளா் சங்கம் சாா்பில் 2 பெண்கள் உள்பட 21 போ் தற்செயல் விடுப்பு எடுத்து கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பிறகு, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தமிழ் செல்வனிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com