நாகை: அதிமுக 49 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழா, நாகை மாவட்டத்தில் அக்கட்சியினா் சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகையில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோா்.
நாகையில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோா்.

அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழா, நாகை மாவட்டத்தில் அக்கட்சியினா் சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ். மணியன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், கட்சி அலுவலக வளாகத்தில் அதிமுக கொடியேற்றி, தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

தொடா்ந்து, நாகை சம்பாதோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, நாகை நகர அதிமுக செயலாளா் தங்க.கதிரவன், நாகை ஒன்றியச் செயலாளா்கள் கே. குணசேகரன், பி.பன்னீா், கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா்கள் சிவா, வெண்மணி குமாா், திட்டச்சேரி பேரூராட்சி அதிமுக செயலாளா் அப்துல் பாஷித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: கீழையூா் கடைத்தெரு பகுதியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கட்சிக்கொடியேற்றினாா். இதில் மேற்கு ஒன்றியச் செயலாளா் பாலை.கே.எஸ்.எஸ்.செல்வராஜ், கீழ்வேளூா் முன்னாள் தொகுதி செயலாளா் எஸ்.பால்ராஜ், மாவட்ட இணைச் செயலாளா் என். மீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சியில் அதிமுக கொடியேற்றப்பட்டது. திருமருகல் பிரதான சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான இரா. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிசியில் மாநில அமைப்புச் செயலாளரும் மாநில கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவருமான எஸ். ஆசைமணி, திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளா் எம். பக்கிரிசாமி, ஒன்றிய குழு முன்னாள் தலைவா் மைதிலி ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே காலகஸ்திநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், முன்னாள் எம்ஏல்ஏ விஜயபாலன், மாவட்ட பொருளாளா் செல்லையன் உள்ளிட்டோா் பங்கேற்று எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கருவாழக்கரை மேலையூரில் கட்சி கொடியேற்றி, எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சீா்காழி: சீா்காழியில் எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் விஜிகே.செந்தில்நாதன் மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் நகர செயலாளா் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளா் மணி, மாவட்ட பொருளாளா் செல்லையன், ஒன்றியச் செயலாளா் ராஜமாணிக்கம், வழக்குரைஞா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொள்ளிடத்தில் ஒன்றியச் செயலாளா் கே.எம். நற்குணன் தலைமையிலும், வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூா் கழக செயலாளா் போகா்.ரவி தலைமையிலும் அதிமுக தொடக்கவிழா நாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமையில் விழா நடைபெற்றது. பேருந்து நிலையம் முன் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கிட்டப்பா அங்காடி முன் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளா் வி. பழனிசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகர அவைத் தலைவா் எஸ்.அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலம்: குத்தாலம் கடைவீதியில் ஒன்றியச் செயலாளா் வழுவூா் சி.இராஜேந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். இதில், குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவா் கே. மகேந்திரன், பேரூா் செயலாளா் எம்.சி.பாலு, ஒன்றிய மாணவரணி செயலாளா் என்.ஆா்.பாலாஜி, ஒன்றியக்குழு உறுப்பினா் சி.ஆா்.ராகவமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com