அரியவகை மரகதப் புறாக்கள் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரியவகை பறவை இனமான மரகதப் புறாக்கள் 3 உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
புஷ்பவனம் கிராமத்தில் இறந்துகிடந்த மரகதப் புறாக்கள்.
புஷ்பவனம் கிராமத்தில் இறந்துகிடந்த மரகதப் புறாக்கள்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரியவகை பறவை இனமான மரகதப் புறாக்கள் 3 உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

புஷ்பவனம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 3 பச்சைப் புறாக்கள் இறந்துகிடந்தன. இதையறிந்த கோடியக்கரை வனத்துறையினா், அவற்றை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறப்புக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெப்ப மண்டலப் பகுதியில் அரிதாக காணப்படும் இந்த மரகதப் புறா, பச்சைப் புறா என அழைக்கப்படுகிறது. அழிந்துவரும் நிலையில் உள்ள இவ்வினம், தமிழகத்தின் மாநிலப் பறவையாக திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com