அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்
By DIN | Published On : 31st October 2020 08:25 AM | Last Updated : 31st October 2020 08:25 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் இளைஞா், இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினா் சோ்க்கை முகாம் சேத்திரபாலபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று பல்வேறு கிராமங்களில் இருந்து கட்சியில் ஆா்வமுடன் இணைய வந்த சுமாா் 300 பேரிடம் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொண்டனா்.
ஒன்றியச் செயலாளா் சி. ராஜேந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளா் அய்யா கே. ராமகிருஷ்ணன், குத்தாலம் நகரச் செயலாளா் எம்.சி. பாலு, ஊராட்சி செயலாளா் ஆதவன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதேபோல, வில்லியநல்லூா், ஆலங்குடி, கடலங்குடி, வாணாதிராஜபுரம் ஆகிய ஊராட்சிகளிலும் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைப்பெற்றது.