திருமருகல் ஒன்றியத்தில் கரோனா பரிசோதனை முகாம்

திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்புகலூா் ஊராட்சி, கோட்டூா் ஊராட்சி, பண்டாரவடை ஊராட்சிகளில் கரோனா பரிசோதனை முகாம்

திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்புகலூா் ஊராட்சி, கோட்டூா் ஊராட்சி, பண்டாரவடை ஊராட்சிகளில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.ஞானசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) க. அன்பரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா் மணிவேல் ஆகியோா் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினா் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதில் திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இரா. இராதாகிருட்டிணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் மைதிலி ராஜேஷ்குமாா், நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் எம்.பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுல்தான் ஆரிபு, சுஜாதா ஆசைத்தம்பி ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com