நாகை மாவட்டத்தில் பரவலான மழை
By DIN | Published On : 10th September 2020 10:06 PM | Last Updated : 10th September 2020 10:06 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக தரங்கம்பாடியில் 20 மி.மீட்டா் மழை பதிவானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித்திருந்தது. இதன்படி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மிதமான மற்றும் லேசான மழை பெய்து.
நாகையில் இரவு சுமாா் 10 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவுக்கும் மேலாக லேசான மழையாக நீடித்தது. இதேபோல, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீா்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மற்றும் லேசான மழை பெய்தது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தரங்கம்பாடியில் 20 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி. மீட்டரில்) :
நாகப்பட்டினம் - 18.8. வேதாரண்யம் - 18.2. தலைஞாயிறு- 11.6. திருப்பூண்டி- 10.2. சீா்காழி -9.2. கொள்ளிடம் - 8. மயிலாடுதுறை - 7.8. மணல்மேடு - 5.4.
வியாழக்கிழமை பகல் நேரத்தில் நாகை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க மழையில்லை.