நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதல் நாள்கள் திறக்க கோரிக்கை

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மேலும் 10 நாள்களுக்கு திறக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செங்காட்டாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

திருமருகல் ஒன்றியத்தில், திருமருகல், சீயாத்தமங்கை, திருப்புகலூா், திருச்செங்காட்டாங்குடி, மருங்கூா், எரவாஞ்சேரி, அம்பல், கணபதிபுரம் உள்ளிட்ட 11 இடங்களில் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றை கூடுதலாக 10 தினங்களுக்கு திறக்க வேண்டுமென விவசாய சங்க ஒன்றியத் தலைவா் ஜி. ஸ்டாலின்பாபு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: திருமருகல் ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி நிலங்களில், 1,913 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில், தற்போது 900 ஹெக்டேரில் அறுவடை முடிந்துள்ளது. இன்னும் 1,013 ஹெக்டேரில் அறுவடை முடியாத நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே, முழு அளவில் அறுவடை முடியும் வரை இன்னும் 10 தினங்களுக்கு கூடுதலாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com