கரோனா பரிசோதனை முகாம்
By DIN | Published On : 18th September 2020 11:37 PM | Last Updated : 18th September 2020 11:37 PM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியத்தில் கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடகரை ஊராட்சியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமில், வடகரை, தென்கரை, திருப்பனையூா் பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) க. அன்பரசு ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா்கள் பிரித்திவிராஜ், காா்த்திக் ஆகியோா் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினா் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.