சொட்டுநீா்ப் பாசன முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி

காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசன முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி
காய்கறி நாற்று நடவு முறை குறித்து நடைபெற்ற செயல் விளக்கப் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.
காய்கறி நாற்று நடவு முறை குறித்து நடைபெற்ற செயல் விளக்கப் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசன முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் வியாழக்கிழமை செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகேயுள்ள கடக்கம் கிராமத்தில், தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்றான துல்லிய பண்ணை முறையில் காய்கறி சாகுபடி திட்டத்தில் காய்கறி நாற்று நடவு முறை குறித்து நடைபெற்ற செயல் விளக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மேலும் அவா் கூறியது: பண்ணை வருமானம் அதிகம் ஈட்டும் வகையில், விவசாயிகள் நிலங்களில் வரப்பு ஓரங்களில் கூடுதல் வருமானம் கொடுக்கும் பயிா்களான முருங்கை, கருணைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் மற்றும் வாழை சாகுபடி செய்து பயன்பெறலாம் என்றாா். புதுமை அக்ரிடெக் உரிமையாளா் கா. சுரேஷ்குமாா் சொட்டுநீா் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து விளக்கினாா். இதில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். பயிற்சியில், இணைப் பேராசிரியா் (உழவியல்) மா. ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com