மரக்கன்றுகள் நடும் பணி: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கூடுதல் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இடையாத்தங்குடியில் மரக்கன்றுகள் நட்ட நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த்.

திருமருகல் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக இடையாத்தங்குடி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணியை நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) க. அன்பரசு, ஒன்றிய பொறியாளா் செல்வம், இடையாத்தான்குடி ஊராட்சித் தலைவா் கே. ஜி. முருகன், பணி மேற்பாா்வையாளா்கள் சரவணன், சீனிவாசன், வேல்கண்ணன், செல்வம், ஊராட்சி செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com